கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்த பயணியர் நிழற்குடையில் அவரது பெயர் அகற்றம் - பரபரப்பு

கோவை குளத்துப்பாளையம் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையின் பெயர் பலகையில் இருந்த எஸ்.பி.வேலுமணியின் பெயர் அகற்றப்பட்டுள்ளது தொடர்பாக அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி குளத்துப்பாளையம் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியால் திறந்து வைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையில் எஸ்.பி.வேலுமணியின் பெயர் பொறிக்கப்பட்ட இடம் அகற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து, 90வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் ரமேஷ், பகுதி கழக செயலாளர்கள், குலசேகரன், மற்றும் மதனகோபால் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் கோவை மாநகராட்சி தெற்கு மண்டல துணை ஆணையாளரிடம் உடனடியாக பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடை பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கையையும் எழுத்துப்பூர்வமாக அதிமுகவினர் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதனை திமுகவினர் யாரேனும் தான் செய்திருக்க கூடும் என அதிமுகவினர் தரப்பில் கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரது சட்டமன்ற தொகுதியில் திறந்து வைத்த பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடையில் அவரது பெயர் பொறிக்கப்பட்டது என்றாலும் தற்போது திமுக ஆட்சியிலும் அவரே அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இவ்வாறு இருக்க இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை செய்தவர்கள் யார் என அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...