கோவையில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

கவுண்டம்பாளையம் அருகே 10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று கஞ்சா கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மனோஜ்-க்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவர் வேலைக்கு பேருந்தில் செல்லும் போது, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்கள் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இதனிடையே மனோஜுக்கு கஞ்சா பழக்கம் இருந்த நிலையில் அவர் அந்த மாணவிக்கும் கஞ்சா பழக்கத்தை கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனோஜ் அந்த மாணவியுடன் சேர்ந்து தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், மனோஜ் அந்த மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மனோஜை கைது செய்து அந்த மாணவியை மீட்டனர். மேலும் விசாரணையில் மனோஜ் அந்த மாணவிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.

இதுகுறித்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனோஜ்க்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் ஐந்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...