கோவை துடியலூர் அருகே வெவ்வேறு இடங்களில் கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது - இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை மாவட்டத்தில் 3 வெவ்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் 2.5 கிலோ கஞ்சா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், வெள்ளக்கிணறு பகுதியில் துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

இந்த சோதனையில், காரில், சுமார் 1 கிலோ 100 கிராம் அளவிலான கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த சின்னவேடம்பட்டியை சேர்ந்த கார் ஓட்டுநர் சூரியா, வால்பாறையை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் அன்பரசு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கவுண்டம்பாளையம் கல்பனா தியேட்டர் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த உதய் சந்திரன் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், கோவை கணுவாய் பேருந்து நிறுத்தம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த சுமார் 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் 3 வெவ்வேறு இடங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து, சுமார் இரண்டரை கிலோ அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...