ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதிக்க கோரி திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு..!

திருப்பூர் அடுத்த அழகுமலை பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதால், விளைநிலங்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அழகுமலை ஊராட்சிக்கு உட்பட்ட நாடார் காலனி மற்றும் கிறிஸ்டியன் காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் ஆடு, மாடு மேய்ப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். அதேபோல் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் இலவச ஆடு வளர்ப்பு திட்டத்தில் சுமார் 50 குடும்பங்கள் ஆடுகளை பெற்று மேய்ச்சல் நிலத்தில் தான் மேய்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே தற்போது அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பாக இப்பகுதியில் விழா நடத்துவதற்கு பந்தல் அமைத்து கால்கோல் விழா நேற்று நடத்தி உள்ளனர்.



இந்நிலையில், இப்பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் பட்சத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, வருடம் முழுவதும் பசுமை பாதிக்கப்பட்டு ஆடு மாடுகளுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும் எனக் கூறி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை விதிக்க கோரி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜல்லிக்கட்டுக்கு வரும் நபர்கள் மது அருந்திவிட்டு அப்பகுதி குடியிருப்பு பகுதி மக்களிடம் மது போதையில் ரகளை ஈடுபடுகின்றனர். இதனால் அப்பகுதி பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தாங்கள் அனைவரும் பட்டியல் இன மக்கள் என்பதால் உயர் சாதியினர் ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என்று அடக்கு முறையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் ஆடு மாடுகளின் நலன்களை கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்தாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...