திருப்பூர் பல்லடம் அருகே தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்து விற்பனை - இருவர் கைது..!

பல்லடம் சாலை சந்தப்பேட்டை அருகே உள்ள குடோனில் நடத்திய அதிரடி சோதனையில் பல லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்காவை கைப்பற்றிய போலீசார், குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.

இதன் அடிப்படையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் இன்று தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்லடம் சாலை சந்தப்பேட்டை அருகில் உள்ள குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.



இதனையடுத்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குடோனில் இருந்த 274 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



இந்நிலையில், போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த தளராம் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களிலும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...