பல்லடம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் உட்பட 7 பேர் கைது - 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்..!

பல்லடம் அருகே முருகன் மில் மற்றும் தெற்குபாளையம் பகுதியில் வாகன சோதனையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 வடமாநில இளைஞர்கள் உட்பட 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்.



திருப்பூர்: தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காவல்துறையினரும் கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்கள், விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள முருகன் மில் பகுதியில் பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே பையுடன் வந்த 3 வடமாநில இளைஞர்கள் போலீசாரை கண்டதும், தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், பையை சோதனை செய்து பார்த்த பொழுது அதில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனை தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த கமலேஷ் குமார், அசோக்ராஜ் மற்றும் 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் திருப்பூர் குப்பாண்டம் பாளையம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி கஞ்சா, கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.



இதேபோல் பல்லடம் தெற்கு பாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது நொச்சிபாளையத்தில் வசித்து வரும் கிஷோர் காந்தி, அபிஷேக் சுராஜ், லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் மற்றும் திருப்பூர் ஆண்டிபாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.



கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் உட்பட 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2.5 கிலோ அளவிலான கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பல்லடத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...