மதுக்கரை அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை - இருவர் கைது…!

கோவை மதுக்கரை நெடுஞ்சாலை அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜான்சன் (45), மதுக்கரை சேர்ந்த ஜாஹிர் உசேன் (54), ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, 3 நம்பர் என்ற ஆன்லைன் லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளதால் அவற்றையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுக்கரை எல்.என்.டி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வைத்து ஆன்லைன் லாட்டரி விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்படி, மதுக்கரை போலீசார் அங்கு இன்று ஆய்வு செய்த போது, அங்கு ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜான்சன் (45), மதுக்கரை சேர்ந்த ஜாஹிர் உசேன் (54), ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 3 நம்பர் லாட்டரி விற்பனைக்காக வைத்திருந்த நோட்டு புத்தகம், மற்றும் ரூ.2,050 பணத்தை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...