திமுக அமைச்சர்களுக்கு உதயநிதியை புகழ்வது தான் ஒரே வேலை - கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உதயநிதி அமைச்சரான பிறகு பல்வேறு கருத்துக்களை திமுகவினர் கூறி வருகின்றனர். திமுக அமைச்சர்களுக்கு உதயநிதியை புகழ்வது தான் ஒரே வேலை என்று விமர்சித்தார்.


கோவை: இன்று பாஜக அரசியலில் இருப்பது தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. 2024 தேர்தல் மோடிஜிக்கான தேர்தல், என்று கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,



அண்ணாமலைக்கும் அ.ராசாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அன்னூர் ஊராட்சியில் வரவுள்ள டிட்கோவை வைத்து தண்ணீரை குறிவைத்து நிறுவனங்கள் வருகிறது. அதனை ஆ.ராசா புரிந்து கொள்ள வேண்டும்.

உதயநிதி அமைச்சரான பிறகு பல்வேறு கருத்துக்களை திமுகவினர் கூறி வருகின்றனர். திமுக அமைச்சர்களுக்கு உதயநிதியை புகழ்வது தான் ஒரே வேலை.

உதயநிதிக்கு திரைத்துறை சார்ந்த அமைச்சகம் தான் பொருத்தமாக இருக்கும். தமிழகத்தில் மற்ற சினிமா தயாரிப்பாளர்கள் பிழைக்க வேண்டுமா, வேண்டாமா?. அதிகாரத்தை வைத்து திரைத்துறையை ஒரு பக்கம் வைக்கக்கூடாது.

ரபேல் விமானத்தின் பாகங்களில் இருந்து 500 கைக்கடிகாரங்கள் செய்யப்பட்டது. அதில், ஒன்றை நான் வாங்கியுள்ளேன். நான் தேசியவாதி என் உயிர் உள்ளவரை இந்த கடிகாரம் என் கையில் இருக்கும்.

மேலும், அதிமுக உட்கட்சி பிரச்சனையில் பாஜக எப்போதும் தலையிடாது. பாஜகவை பற்றி பேசி தான் திமுக வண்டி ஓடுகிறது. ஆரிய - திராவிடம் என்கிற பிரிவினையை ஏற்காதவன் நான். பாஜக அரசியலில் இருப்பது தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. 2024 தேர்தல் மோடிஜிக்கான தேர்தல்.

பாஜக சார்பில் 9 புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொடுத்துள்ளோம். அரசின் அழுத்தத்தால் வழக்கு இல்லாமல் போகிறது. தமிழக காவல்துறை மிகவும் புத்திசாலித்தனமானது. ஆனால்,

காவல்துறையின் கைகள் கட்டிப் போடப்பட்டுள்ளது. கோவை கார் வெடி விபத்து என் ஐ ஏ விசாரணை திருப்திகரமாக உள்ளது.

அன்னூர் பகுதியில் ஏற்கனவே தனியார் நிறுவனம் வாங்கி வைத்துள்ள தரிசு நிலம் கையகப்படுத்தப்படும் என்கிற அரசின் அறிவிப்பை பாஜக வரவேற்கிறது.

விவசாயம் பற்றி ஆளும்கட்சி உணர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. மேலும், இதில் தவறாக கொடுக்கப்பட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும். நீர், நிலத்தை மாசுபடுத்தாத நிறுவனங்கள் மட்டுமே என அரசு தெரிவித்துள்ளது.. அதனை திமுக காப்பாற்ற வேண்டும், மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அன்னூர் தொழில் பேட்டை நிலம் கையகப்படுத்துதல் குறித்து

அ.ராசா செய்தியாளர்களிடம் பேசியது பச்சை பொய். அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதேபோல, டேன்- டீ ஆரம்பித்தது லாப நோக்கிற்காக அல்ல. இலங்கையில் இருந்து வந்த மலையக தமிழர்களின் நலனுக்காக துவங்கப்பட்டது என்பதை ஆ. ராசா புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போதும் ஆ.ராசா 2 ஜி குற்றவாளி என்பதை மறந்து விடக் கூடாது.

தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகர் தமிழக முதல்வர் தான்.தமிழக மக்கள் ஒவ்வொரு நாளும் விலைவாசி உயர்வை சந்திக்கின்றனர்.

கோவை கிணத்துக்கடவு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்துள்ளது. பாஜக தொடர் போராட்டங்களை கையில் எடுக்கும். திமுக அரசு பிரன்ச்சு புரட்சி ஏற்பட்டதற்கு நிகராக உள்ளது.

அமுல் நிறுவனத்தில் வரும் லாபத்தில் 82 சதவிகிதம் விவசாயிகளுக்கு செல்கிறது. ஆனால், ஆவின் நிறுவனம் அப்படி நடந்து கொள்ளவில்லை. ஆவின் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதே சமயம், திமுக அமைச்சர் ஒருவரின் பால் நிறுவனம் ஊக்குவிக்கப்படுககிறது என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...