கோவையில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது - 3.1 கிலோ கஞ்சா பறிமுதல்

பெரியநாயக்கன் பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை, கையும் களவுமாக பிடித்து கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த பின் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.


கோவை: கஞ்சா போதை பொருள் விற்பனையாளர்களின் சட்டவிரோத செயல்களை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து போதைப்பொருள் விற்பனையை தடுத்து கைது நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் ராக்கிபாளையம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ரவி(45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 கிலோ அளவிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் துடியலூர் அடுத்த கவுண்டம்பாளையம் கல்பனா தியேட்டர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த உதயச்சந்திரன் (39) என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 1.100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மொத்தம் 3.100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...