கோவையில் உயர்ரக போதை மாத்திரையை விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது….!

உயர்ரக போதை மாத்திரையை விற்பனை செய்ததற்காக சிறையில் உள்ள திருச்சூரை சேர்ந்த கோகுல் என்ற நபரை எஸ். பி பரிந்துரையின் பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு.


கோவை: கடந்த 2 மாதங்களுக்கு முன் துடியலூர் அருகே உயர்ரக போதை மாத்திரையை விற்பனை செய்த கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த கோகுல் (28) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து "மெத்தபாலிட்டிமைன்” என்ற உயர்ரக போதை மாத்திரைகள் பறிமுதல் செய்த போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோகுலை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், உயர்ரக போதை மாத்திரையை விற்பனை செய்த கோகுலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

பரிந்துரையை ஏற்ற கோவை மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் சமீரன், கோகுலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி எச்சரிக்கை செய்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...