கோவை சூலூர் அருகே பேருந்து நிறுத்தப்படாததை கண்டித்து பொதுமக்கள், மாணவர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

சூலூர் அடுத்த சின்னப்புத்தூர் கிராமத்தில் பேருந்து நிறுத்தாமல் ஓட்டுனர்கள் அலட்சியமாக செயல்படுவதால் பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள், மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்.



கோவை: கோவை மாவட்டம் சூலூரை அடுத்த செஞ்சேரிப்புதூர் அருகே உள்ளது சின்னப்புத்தூர் கிராமம். பல்லடம் - உடுமலை பிரதான சாலையில் உள்ள இந்த கிராமத்தில் இருந்து ஏராளமான பள்ளி மாணவர்கள் கேத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

அதேபோல், ஏராளமான தொழிலாளர்கள் பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்காக சென்று வருகின்றனர். இந்நிலையில் பல்லடம் முதல் உடுமலை செல்லும் பேருந்துகள் சின்னப்புத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதில்லை என்று தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

பேருந்துகள் சரிவர நிற்காததால் பொதுமக்கள் சந்தித்து வரும் இன்னல்களை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாராக கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.



முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்த பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இன்று காலை பல்லடம் உடுமலை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தின் போது, பேருந்து பிரச்சனையால் சரியான நேரத்துக்கு பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் சிரமம் அடைந்து வருவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.



இந்நிலையில், சாலை மறியல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுல்தான்பேட்டை காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், புகார் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று உறுதியளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது.

சுமார் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பல்லடம் - உடுமலை சாலையில் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

Newsletter

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...