திருநெல்வேலியில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் கோவையில் மீட்பு…!

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய 16 வயது சிறுவனை கே.ஜி.சாவடி போலீசார் மீட்டனர். பின்னர், டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவனை பெற்றோர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.


கோவை: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், ஒழுங்காக பள்ளிக்கு செல்லாமல் கடைக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால், சிறுவனின் பெற்றோர் பள்ளி செல்ல வலியுறுத்தி அடிக்கடி சிறுவனை திட்டியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 6 நாட்களுக்கு முன் சிறுவன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டான். சிறுவன் காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று கோவை கே.ஜி. சாவடி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு சிறுவன் நடந்து வருவதை பார்த்துள்ளனர். பின்னர், அவரை அழைத்து விசாரித்த போது, சிறுவன் தான் வீட்டிலிருந்து வந்ததை கூறியுள்ளார். மேலும், திருநெல்வேலியில் இருந்து ரயில் மூலம் கேரளா சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து நடந்தபடி வாளையாறு எல்லைக்கு வந்ததாக சிறுவன் போலீசாரிடம் கூறியுள்ளான்.

இதையடுத்து சிறுவனை மீட்ட போலீசார், திருநெல்வேலியில் உள்ள அவனது பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், சிறுவனை டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று கோவை வந்த பெற்றோரிடம் சிறுவனை, குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...