கோவை சரகத்தில் குற்ற வழக்குகள் குறைந்து, சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது - மேற்கு மண்டல ஐஜி.சுதாகர்

கோவை சரகத்தில் நடைபெற்ற குற்ற வழக்குகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் பேசிய ஐ.ஜி சுதாகர், கோவை சரகத்தில் அனைத்து மாவட்டத்திலும் சராசரியாக 30 விழுக்காடு கொலை வழக்குகள் குறைந்துள்ளது என்றார்.


கோவை: கோவை சரகத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட காவல் நிலையங்களில் நடப்பாண்டில் நடைபெற்ற குற்ற வழக்குகள் குறித்த ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது.



மேற்கு மண்டல ஐஜி.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், கோவை சரக டிஐஜி முத்துசாமி, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட எஸ்.பி க்கள், மற்றும் டி.எஸ்.பி-க்கள் பங்கேற்றனர்.



ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கோவை சரகத்தில் கடந்த 2021 ஆண்டை விட, இந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது.

கோவை சரகத்தில் கடந்த ஆண்டு மொத்தம் - 142 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டில் 91 வழக்களா குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட 50 விழுக்காடு கொலை வழக்கு குறைந்துள்ளது.

கோவை சரகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் சராசரியாக 30 விழுக்காடு கொலை வழக்குகள் குறைந்துள்ளது. இதுவே சட்டம் ஒழுங்குக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் போக்ஸோ வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 17 வழக்குகளில் தீர்ப்பு பெறப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 87 வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. கோவை சரகத்தில் மொத்தம் 308 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

கோவை சரகத்தில் மொத்தம் 1,211 கிராமங்கள் உள்ளது. அதில் 721 கிராமம் கஞ்சா இல்லாத கிராமங்களாக உள்ளது. மொத்த கிராமங்களில் 60 விழுக்காடு கிராமங்களில் கஞ்சா இல்லாத கிராமம்.

கடந்த ஆண்டு ஆதாய கொலை - 9 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 4 ஆக குறைந்துள்ளது. கோவை சரகத்தில் குற்ற வழக்குகள் குறைந்துள்ளது.

கஞ்சா இல்லாத மண்டலமாக அறிவிக்க வேண்டும், கொலை குற்ற வழக்குகளை குறைக்க வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுப்பது இலக்காக உள்ளது.

இந்த ஆண்டு கோவை சரகத்தில் 155 பேர் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை. புரோஜெக்ட் பள்ளிக்கூடத்திற்கு பிறகு 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, 39 குழந்தைகள் புகார் அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...