திருமாவளவன், வன்னியரசுவை கைது செய்ய கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு

தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்யவும், திருமாவளவன், வன்னியரசுவை கைது செய்யக் கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு.



கோவை: விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய கோரியும் அதன் தலைவர்கள் திருமாவளவன் மற்றும் வன்னியரசு ஆகியோரை கைது செய்ய கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



இந்து மக்கள் கட்சியின் கோவை மாவட்ட தலைவர் வி.வி.மாணிக்கம் தலைமையில் மனு அளிக்க வந்த அக்கட்சியினர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தை கட்சிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



தமிழகத்தில் சமீப காலங்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் அராஜகப் போக்கு எல்லை மீறிப் போவதாகவும் தொடர்ந்து தேச விரோத பிரிவினை சக்திகளோடு கைகோர்த்து தனி தமிழ்நாடு கோரிக்கை பேசுவது மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் இருந்து கொண்டு இந்து சமய நம்பிக்கைக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் சென்ற வாகனத்தின் மீது கற்களையும், கம்பிகளையும் வீசி தாக்க முயன்றனர் விசிக-வினர் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு தொலைபேசி மூலமாக தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.



எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும். மேலும் அதன் தலைவர்கள் திருமாவளவன் மற்றும் வன்னியரசு ஆகியோர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...