ஆயத்த ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க பஞ்சு இறக்குமதி வரி ரத்து அவசியம் - இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு

அமெரிக்க ஆயத்த ஆடை சந்தையில் இந்தியா ஏற்றுமதியை அதிகரிக்க பஞ்சுக்கான 11 சதவீத இறக்குமதி வரியை முற்றிலுமாக மத்திய அரசு நீக்க வேண்டும் என இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு வலியுறுத்தல்.


கோவை: அமெரிக்க ஆயத்த ஆடை சந்தையின் புது வியாபாரம் ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. அதில் இந்தியா அதிக ஆர்டர்களை பெற பஞ்சுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு(ஐடிஎப்) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,



உலகின் மிகப்பெரிய வர்த்தக சந்தையாக அமெரிக்க வர்த்தக சந்தை கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ரூ.8.5 லட்சம் கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகளை அந்நாடு இறக்குமதி செய்கிறது.

அதிக ஆயத்த ஆடைகள் கையிருப்பில் உள்ள காரணத்தால் இந்த ஆண்டு மூன்று மாதங்கள் வரை இறக்குமதியை முற்றிலும் குறைக்கும் முயற்சியில் அந்நாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

2022 ஏப்ரல் மாதத்தில் ரூ.65 ஆயிரம் கோடியாக இருந்த அமெரிக்காவின் ஆயத்த ஆடை இறக்குமதி படிப்படியாக உயர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் ரூ.83 ஆயிரம் கோடியாக அதிகரித்தது. அக்டோபர் மாதத்தில் மீண்டும் ரூ.65 ஆயிரம் கோடியாக குறைந்தது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு அமெரிக்காவில் வணிகம் சிறப்பாக இருக்கும் என்ற காரணத்தால் 2023-ம் ஆண்டு ஜனவரி முதல் அமெரிக்காவின் ஏற்றுமதி பணி ஆணைகள் வரத்தொடங்கி நிலையான தன்மை காணப்படும் என நம்பப்படுகிறது.

அக்டோபர் மாதத்தில் அமெரிக்க ஆயத்த ஆடை இறக்குமதியில் சீனாவின் பங்கு 19.5 சதவீதம், வியட்நாம் 17.5 சதவீதம் இந்தோனேசியா 6.1 சதவீதம் இந்தியாவின் பங்கு 4.5 சதவீதமாக பதிவாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் பங்கு 7.4 சதவீதமாக இருந்தது தற்போது 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது மிகவும் கவலைக்குறியது.

அமெரிக்க சந்தையில் சீனா இழக்கும் வியாபாரத்தை வியட்நாம், வங்கதேசம் மற்றும் கம்போடியா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு காரணங்களால் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளன.

பஞ்சு விலை அதிகரிப்பு, அமெரிக்க பணி ஆணைகளை கையாளும் அளவுக்கு பெரிய உற்பத்தி மையங்கள் இல்லாதது, செயற்கை இழை (பாலியஸ்டர்) சார்ந்த ஆடைகளை அதிகமாக தயாரிக்காதது உள்ளிட்டவை இந்தியா பின்தங்கி உள்ளதற்கு சில முக்கிய காரணங்களாகும்.

இருப்பினும் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வரவுள்ள அமெரிக்க பணி ஆணைகளை இந்திய ஜவுளித்தொழில் நிறுவனங்கள் அதிகம் பெற்று பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு உதவும் வகையில் மத்திய அரசு பஞ்சுக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை முற்றிலும் நீக்க வேண்டும். பெரிய ஜவுளி உற்பத்தி கட்டமைப்பு ஏற்படுத்த உதவும் மித்ரா பார்க் திட்டத்தை விரைவில் செயல்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...