கோவையில் ஆட்டோ ஓட்டுனரை ஏமாற்றி பணத்தை ஆட்டையைப் போட்ட ஆன்லைன் ஆசாமிகள்..!

சிங்காநல்லூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சசிகுமாருக்கு, ஆன்லைனில் வாங்கிய பொருளுக்கு பரிசாக ரூ.13 லட்சம் தருவதாக கூறி ஏமாற்றி ஜி.எஸ்.டி மற்றும் வரி செலுத்த வேண்டும் என ஆயிரக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய ஆன்லைன் ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.


கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்தவர் சசிகுமார். ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகன ஓட்டுநரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேப்டால் என்ற ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் இருந்து 2 பொருட்களை வாங்கியுள்ளார்.

இதனிடையே அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் (Message) வந்துள்ளது. அதில் ஏற்கனவே வாங்கிய பொருட்களுக்கு பரிசாக 13 லட்சம் ரூபாய் விழுந்துள்ளதாகவும், அதனை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறுந்தகவலில் இருந்த எண்ணுக்கு அவர் அழைத்து பேசியுள்ளார். அப்போது, அவர்கள் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் டேக்ஸ் கட்ட வேண்டும் வங்கி பரிவர்த்தனை செலவு உள்ளிட்டவற்றுக்கு பணம் செலுத்திய பின்னரே பரிசு தொகையை தர முடியும் என கூறியுள்ளனர்.

லட்சக்கணக்கில் பணம் தரப்பட உள்ளது என நம்பிய சசிகுமார் அவர்கள் கேட்ட பணத்தை அவர்களுக்கு செலுத்தியுள்ளார். அக்டோபர் மாதம் முதல் அவ்வப்போது ஐந்தாயிரம், பத்தாயிரம் என அவர்கள் தந்த வங்கி கணக்கில் செலுத்தி வந்துள்ளார்.

ஆனால் பரிசு பணம் சசிகுமார் கணக்கிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சசிகுமார் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அலைபேசிக்கு வரும் குறுந்தகவல்கள், ஆன்லைனில் தெரிவிக்கும் உத்தரவாதங்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், பொதுமக்கள் இதுபோன்ற ஆசாமிகளிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...