திருட்டு வழிப்பறி சம்பவங்களை தடுக்க கோவை மாவட்டத்தில் 400 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம் - எஸ்.பி பத்ரி நாராயணன்

கோவை மாவட்டத்தில் வழிப்பறி திருட்டை தடுக்க 400 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு இருப்பதாகவும், தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று எஸ்.பி பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை புறநகர் பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து இதுவரை ரூ.3.50 கோடி மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

475 குற்றங்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 48 குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட நீலாம்பூர் அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் சந்தியா என்பவர் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 6 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது.

இதேபோல, காடம்பாடி பகுதியைச் சேர்ந்த கோபு என்பவர் வீட்டில் 2 பவுன் தங்க நகைகளையும், மயிலம்பட்டி தனம் நகர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் என்பவர் வீட்டில் 2 பவுன் தங்க நகைகளையும், அப்பநாயக்கன்பட்டி பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் வீட்டில் 22 பவுன் தங்க நகைகளும், ரூ.1.60 லட்சம் ரொக்கமும் வருமானம் மர்ம நபர்களால் திருடப்பட்டு இருந்தது.

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து சூலூர் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்ட கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த முபாரக் அலி, பீளமேட்டை சேர்ந்த ஜெகநாதன், தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.



இவர்களிடம் இருந்து 32 பவுன் தங்க நகைகள் ரூ. 3 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கலந்துகொண்டு உரியவர்களிடம் நகைகள் பணத்தை ஒப்படைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-



கோவை புறநகர் பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து இதுவரை ரூ.3.50 கோடி மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 475 குற்றங்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 48 குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் தொலைந்து போன 694 செல்போன்கள் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 300 சவரன் நகைகளை போலீசார் மீட்டு உள்ளனர். இதில், காரமடை, வடுகபாளையம், பொள்ளாச்சி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களும் அடங்கும்.

திருட்டு, கொள்ளை, வழிப்பறியை தடுக்க கோவை மாவட்டத்தில் முக்கிய இடங்களில் 400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. சில முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் கைதாகி சிறைக்கு சென்று விட்டு ஜாமீனில் வெளியே வருபவர்கள் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். அதேபோல, தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் நடந்த திருட்டு சம்பவங்களில் பறிபோன நகைகளும் விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நகைகளை மீட்க தனிப்படை அமைக்கப்படும். பொதுமக்களும் திருட்டை தடுக்க வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க முன்வர வேண்டும், என்றார்.

Newsletter

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...