கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.



கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி முதலாம் ஆண்டு இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.



மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியின், ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2.5 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் கல்லூரி தமிழ் மன்றத்தையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

அதேபோல, CSR திட்டத்தின் கீழ் 1 கோடியே 80 லட்சம் மதிப்பில் புதுபிக்கப்பட்ட குழந்தைகள் அவரச கால பராமரிப்பு பிரிவு, குழந்தைகள் பிரிவு, தீவிர அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் ரூபாய் 70 லட்சம் செலவில் மருத்துவ உபகரணங்களையும் துவக்கி வைத்தனர்.

அதேபோல, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 2.20 கோடி மதிப்பில் CT ஸ்கேன், 25 லட்சம் மதிப்பில் உயர் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் சூலூர் அரசு மருத்துவமனையில் 12 படுக்கைகளுடன் கூடிய அவரச சிகிச்சை பிரிவு கட்டிடம், மற்றும் நவீன உயிர் காக்கும் கருவிகளை பயன்பாட்டிற்கு காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தனர்.

பின்னர், ஜமீன் ஊத்துக்குளி, 4 வீரபாண்டியில் செவிலியர் குடியிருப்பு கட்டிடம் வி.காளியாபுரம், பூராண்டம்பாளையம், போடிப்பாளையம், எம்.ஜி.புதூர், அய்யம்பாளையம், சின்ன நெகமம் ஆகிய பகுதிகளில் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், சந்திராபுரம், ரெட்டியாரூர், ஆழியார் நகர் ஆகிய இடங்களில் புறநோயாளிகள் பிரிவை திறந்து வைத்தனர்.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...