பல்லடத்தில் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தின் போது காங்கிரஸ் - போலீசார் இடையே வாக்குவாதம்..!

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர். அப்போது பட்டாசு வெடிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர், போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


திருப்பூர்: கடந்த மாதம் இமாச்சல பிரதேச சட்டசபைக்கு தேர்தல் நடந்திருந்தது. இன்று பதிவான ஓட்டு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை தட்டிப் பறித்தது.

காங்கிரசின் இந்த வெற்றியை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, திருப்பூர் பல்லடம் பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினருக்கும், பஸ் நிலையம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



பின்னர், சிறிது நேரம் கழித்து காங்கிரசார் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.

அதே இடத்தில், பா.ஜ.க வினரும் குஜராத்தில் பா. ஜனதா வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடினர். வெவ்வேறு துருவங்களாக உள்ள காங்கிரஸ், பா. ஜனதா கட்சியினர் ஒரே இடத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் பஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...