கூடலூரில் மூதாட்டி ஒருவரை தாக்கி கொலை செய்த PM2 மக்னா யானையை பிடிக்க வனத்துறை 18 நாட்களாக முயற்சி செய்து வரும் நிலையில், இன்று அதிகாலை மேலும் ஒரு வீட்டை இடித்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா, புளியம்பரை, வாழவயல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றித்திரியும் PM2 மக்னா யானை இதுவரை 50 க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அரிசி போன்ற உணவுப் பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருகிறது.
இதனிடையே கடந்த மாதம் பாப்பாத்தி என்ற மூதாட்டியை அடித்துக் கொன்ற இந்த யானையை பிடிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், கடந்த 18 நாட்களாக வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், 4 கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் PM2 மக்னா யானை சிக்காமல் தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது.

இதனிடையே நேற்று அதிகாலை இரண்டு வீடுகள் சேதப்படுத்திய PM2 மக்னா யானை, இன்று காலை தேவாலா அருகே கரிய சோலை பகுதியில் உள்ள டேன் டீ குடியிருப்பில் நம்பர் 3 ரேஞ்ச் பகுதியில் புகுந்து காளிதாஸ் என்பவர் வீட்டை உடைத்து சேதப்படுத்தி உள்ளது.

வீட்டை உடைத்து உள்ளே சென்ற யானை வீட்டிற்குள் இருந்த அரிசியை சாப்பிட்டு அட்டகாசம் செய்துள்ளது. அப்போது வீட்டிற்குள் படுத்திருந்த காளிதாஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
18 நாட்களாக வனத்துறைக்கு போக்கு காட்டி வரும் PM2 மக்னா யானை மேலும் ஒரு வீட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.