கோவை துடியலூரில் கஞ்சா விற்பனை: வடமாநில இளைஞர், 5 கல்லூரி மாணவர்கள் கைது - 3 கிலோ கஞ்சா, பட்டாக் கத்திகள் பறிமுதல்..!

துடியலூரில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், விற்பனைக்கு பயன்படுத்திய 5 கல்லூரி மாணவர்களையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 3 கிலோ கஞ்சா, 4 பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள தனியார் வங்கி அருகே கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.



இதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவரை பிடித்து சோதனை செய்துள்ளனர். சோதனையில் அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் உத்தரபிரதேசம் மாநிலம் பாலியா மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் குமார் பட்டேல் (25) என்பது தெரியவந்தது. மேலும், இவர் கோவை என்.ஜி.ஜி.ஓ காலணி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து கொண்டு கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இவர் கல்லூரி மாணவர்கள் மூலமாகவும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு குளம் காடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நின்றிருந்த கல்லூரி மாணவர்களிடம் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த அறையில் சோதனையிட்ட போது கஞ்சா பொட்டலங்கள், பட்டாக் கத்திகள் இருந்தது தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட இளைஞர்கள் கோவில் பாளையத்தை சேர்ந்த ரவீந்திரா (21), சரவணம்பட்டியை சேர்ந்த நந்தகுமார் (19), தினேஷ்வரன் (19), தனுஷ் (19) மற்றும் சதீஷ்வரன் (19) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் அனைவரும் தனியார் கல்லூரியில் இரண்டாவது ஆண்டு பி.காம் படித்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து 5 கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநில இளைஞர் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் 4 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்தனர்.

கோவையில் கல்லூரி மாணவர்கள் மூலம் கஞ்சா விற்பனை நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...