கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர்.
கோவை: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கோவை மாவட்டக் குழு, கற்பகம் உயர்கல்வி கழகத்துடன் இணைந்து கோவையில் மாவட்ட அளவிலான 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தியது.

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டின் துவக்க விழாவில் கற்பகம் உயர்கல்வி கழகத்தின் துணை வேந்தர் முனைவர் ப. வெங்கடாசலபதி தலைமையில், பதிவாளர் முனைவர் ம. பழனிச்சாமி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
முன்னதாக மாநாட்டிற்கு வந்தவர்களை உயர்கல்வி கழகத்தின் மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப. தமிழரசி வரவேற்றார்.
இந்த மாநாட்டில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர். பூபதி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் எம்.எஸ். முகமது பாதுசா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரிஷி. சரவணனின் நன்றி உரையுடன் துவக்கவிழா நிறைவு பெற்றது.

இந்த மாநாட்டில் 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் தங்களின் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
இம்மாநாட்டில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 40க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 87 அறிவியல் ஆய்வு கட்டுரைகள் மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.
அடுத்து மாநில அளவில் பங்கேற்க உள்ள ஆய்வுகளை தேர்வு செய்ய கற்பகம் உயர் கல்வி கழகத்தின் பேராசியர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் என 25 பேர் மதிப்பீட்டாளர்களாக பணியாற்றினர்.
மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் சமர்ப்பிக்கப்பட்ட அக்கட்டுரைகளிலிருந்து 10 கட்டுரைகள் எதிர்வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற உள்ள மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவற்றில் 2 ஒன்றிய நடுநிலை பள்ளிகள், 3 அரசு மேல் நிலை பள்ளிகள், 1 அரசு உதவி பெறும் பள்ளி, மற்றும் 4 தனியார் பள்ளி மாணவர்களின் ஆய்வு கட்டுரைகளாகும்.
இம்மாநாட்டினை கோவை மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் கோவை கற்பகம் உயர்கல்வி கழகத்தின் பேராசிரியருமான சிவசெந்தில் எற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.