கோவை கிழக்கு மண்டல பகுதிகளில் நடைபெறும் தூய்மை, குடிநீர் விநியோக பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

கோவை கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 5வது வார்டில் நடைபெற்று வரும் தூய்மைப்‌ பணிகள்‌, குடிநீர் விநியோகப்‌ பணிகள்‌, டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்‌ மற்றும்‌ மழைநீர்‌ வடிகால்‌ கட்டுமானப்‌ பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் பிரதாப், அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட விநாயகபுரம்‌, சர்ச்‌ வீதி பகுதிகளில்‌ மாநகராட்சி தூய்மைப் பணியாளார்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் பிரதாப், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என தூய்மை பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, 5வது வார்டுக்கு உட்பட்ட விநாயகபுரம்‌, சர்ச்‌ வீதி பகுதிகளில்‌ டெங்கு கொசு ஒழிப்பு பணியாளார்கள்‌ வீடு வீடாகச்‌ சென்று அபேட்‌ மருந்தை தொட்டிகளில்‌ ஊற்றுவது, தேவையில்லாத பொருட்களை அகற்றுவது, பொது மக்கள்‌ தேக்கி வைத்துள்ள நீரில்‌ கொசுப்‌ புழுக்கள்‌ உள்ளனவா என்பதை கண்டறிவது போன்ற பணிகளில்‌ ஈடுபட்டு வருகின்றனர்.



இதனை நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் பிரதாப், டெங்கு கொசு ஓழிப்பு பற்றிய விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம்‌ ஏற்படுத்திட வேண்டும்‌ என டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.



பின்னர்‌, விநாயகபுரம்‌, சாச்‌ வீதி பகுதிகளில்‌ உள்ள பொதுமக்களிடம்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்து கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப், அப்பகுதியில்‌ உள்ள குடியிருப்புகள்‌ மற்றும்‌ முக்கிய பகுதிகளில்‌ வீட்டின்‌ முன்புறம்‌ அமைக்கப்பட்டுள்ள சாய்தள கட்டுமானங்களை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட உதவி நகரமைப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.



பின்னர்‌, வளியாம்பாளையம்‌ பகுதியில்‌ ரூ.18.60 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்படவுள்ள மழைநீர் வடிகால்‌ அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையர்‌ நேரில் ஆய்வு செய்த பின்னா்‌, அப்பகுதியிலுள்ள பொதுக்கழிப்பிடத்தை தூய்மையாக பராமரிக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர்‌ நவீன்குமார்‌, உதவி ஆணையர்‌ முத்து ராமலிங்கம்‌, உதவி செயற்பொறியாளர்‌ சுந்தர்ராஜன்‌, உதவி நகரமைப்பு அலுவலர்‌ ஜெயலட்சுமி, உதவி பொறியாளா்கள்‌ குமார்‌, திருமூத்தி, சுகாதார ஆய்வாளர்‌ குணசேகரன்‌, மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளிட்டோர் உடனிருந்தனர்‌.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...