பாபர் மசூதி இடிப்பு குறித்து கலகம் மூட்டும் டுவீட்: அர்ஜுன் சம்பத் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு..!

இரு பிரிவினருக்கு இடையே கலகம் ஏற்படுத்தும் வகையில் டுவீட் செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது 153 ஏ மற்றும் 505(2) என இரு பிரிவுகளின் கீழ் பந்தைய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: டிசம்பர் 6 ஆம் தேதி என்பது இந்தியாவில் பதற்றத்துக்குரிய

நாளாகவே பார்க்கப்படுகின்றது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இந்த நாளில், அசம்பாவிதங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். குறிப்பாக,

சமூக வலைத்தளங்களில் யாரேனும் சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகள் செய்கின்றனரா..? என்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவர்.

இந்த நிலையில், நேற்று டிசம்பர் 6ஆம் தேதி "அடிமைச் சின்னம் அகற்றப்பட்ட நாள்... இந்துக்களின் வெற்றி திருநாள்... டிசம்பர் 6 ..." என்று தனது டிவிட்டர் பக்கத்தில் அர்ஜுன் சம்பத் பதிவிட்டிருக்கின்றார். மேலும்,"அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டிட சபதம் ஏற்போம்" என்றும் அவர் பகிர்ந்த போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்று இருக்கின்றன.



அர்ஜுன் சம்பத்தின் இந்த ட்விட் போஸ்டரை சோசியல் மீடியாவில் பகிர்ந்து தடா ரஹீம் என்பவர், "அடிமைச் சின்னம் அகற்றப்பட்ட நாள் என்று நீங்கள் போடுவது சரி என்றால், பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் அவமானச் சின்னம் எழுப்ப சதி செய்யப்பட்ட நாள் என நான் பதிவு போடுவதில் என்ன தவறு" என்றுகேள்வி எழுப்பி இருக்கின்றார்.



இதுகுறித்து போலீசார் கவனத்திற்கு வந்த நிலையில், அர்ஜுன் சம்பத் மீது 153 ஏ மற்றும் 505(2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். சமூக அக்கறையுடன் பொதுவெளியில் இயங்க வேண்டிய தலைவர்கள் இதுபோன்று பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எண்ணமாக இருக்கின்றன.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...