கோவையில் நாட்டிய பள்ளியில் சிலைகள் திருடிய வழக்கு - மது பாட்டில்கள் வாங்க திருடிய இருவர் கைது…!

சுந்தராபுரம் அருகே தனியார் நாட்டிய பள்ளியின் பூட்டை உடைத்து சிலைகளை திருடிச் சென்ற சம்பவத்தில், சிசிடிவி காட்சிகளை கொண்டு கார்த்திக் (25) மற்றும் கிரண் (22). என்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியை சேர்ந்தவர் முரளி (50). இவர், அதே பகுதியில் நாட்டியப்பள்ளி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு நாட்டிய பள்ளிக்கு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து, அங்கிருந்த நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை, இரண்டு குத்து விளக்குகள் ஆகியவை திருடிச் சென்றனர்.



திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த குனியமுத்தூர் போலீசார், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து உதவி ஆணையாளர் ரகுபதி ராஜா உத்தரவின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த சிசிடிவி காட்சிகளில், இரண்டு மர்ம நபர்கள் கட்டை பையில் சிலைகளை வைத்து எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து தலைமறைவான மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சுந்தராபுரம் மாச்சம்பாளையம் ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்த கார்த்திக் (25) மற்றும் கிரண் (22) என்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், இருவரும் போதையில் கூடுதல் மது பாட்டில்களை வாங்க திருடியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த சிலைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...