சிசிடிவி காட்சிகள்: துடியலூர் அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் - அலறியடித்து ஓடிய கட்டிட தொழிலாளர்கள்..!

துடியலூர் அருகே கட்டிட தொழிலாளர்களின் தற்காலிக வீடுகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த பன்னிமடை, வரப்பாளையம், பொன்னூத்து உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த கிராமங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி நாள்தோறும் காட்டு யானைகள் வருவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் நேற்றிரவு 4 யானைகள் கொண்ட கூட்டம் கதிர் நாயக்கன்பாளையம் கிராமத்துக்குள் புகுந்துள்ளது.

அவ்வாறு புகுந்த யானைகள் அங்குள்ள வீடு மற்றும் தோட்டத்தில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி உள்ளன.



இதனை தொடர்ந்து அப்பகுதியில் கட்டிட வேலைக்காக தங்கி உள்ள தொழிலாளர்களின் அறைகள் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற யானைகள் தொழிலாளர்கள் சமையலுக்கு வைத்திருந்த அரிசிகளை வெளியே இழுத்து தின்று சேதப்படுத்தி உள்ளன.



மேலும் அவர்கள் தங்கியிருந்த தகர சீட்டுகளையும் யானைகள் சேதபடுத்தி உள்ளன. இந்நிலையில் யானைகளை கண்டு அச்சமடைந்த கட்டுமான தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி உயிர்தப்பினர்.

இந்நிலையில் யானைகள் உள்ளே நுழைய முயன்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனிடையே இரவு நேரங்களில் காட்டு யானைகள் உலா வருவதால் வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...