நீலகிரி கூடலூர் அருகே ஒரு வயது குட்டி யானை சேற்றில் சிக்கி உயிரிழந்த சோகம்..!

கூடலூர் வாச்சிக்கொல்லி பகுதியில் சேற்றில் சிக்கி உயிரிழந்த குட்டி யானையை மீட்க வனத்துறையினர் தாய் யானையை விரட்ட முயன்ற போது, ஆக்ரோஷத்துடன் துரத்திய நிலையில், கும்கி யானையை கொண்டு தாய் யானையை வனப்பகுதிக்குள் விரட்டிய பின் குட்டி யானையின் உடலை மீட்டனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட வாச்சிகொல்லி பகுதியில் யானைகளின் பிளிறல் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. அது குறித்து அப்பகுதியில் உள்ள பழங்குடியினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போது ஒரு குட்டி யானை அங்குள்ள நீர் நிலையில் இருந்த சேற்றில் சிக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அதன் அருகே தாய் யானை சத்தமிட்டவாறு நிற்பதை கண்ட வனத்துறையினர், தாய் யானையை விரட்ட முயன்றனர்.

அப்போது ஆக்ரோஷத்தில் இருந்த தாய் யானை வனத்துறையினரை துரத்தியது. இதையடுத்து, அங்கு கும்கி யானை வரவழைக்கப்பட்டு, தாய் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.



நீண்ட நேரத்திற்கு பிறகு தாய் யானை வனப்பகுதி சென்றதை தொடர்ந்து, இறந்த குட்டியின் உடலை மீட்டு முதுமலை வன கால்நடை மருத்துவர் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.



அப்போது இறந்தது ஒரு வயது மதிக்கதக்க ஆண் குட்டி யானை என்பது தெரிய வந்தது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...