வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவை பாஜக வேட்பாளரை எப்படி வெற்றி பெற வைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் - வேலூர் இப்ராஹிம்

கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில், சிறுபான்மை அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், சிறுபான்மை மக்களின் ஆதரவை பாஜக பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.



கோவை: வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், கோவை மாவட்டத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நிற்கும் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கான திட்டங்களை மற்றும் முன்னேற்பாடுகளை எப்படி செய்ய வேண்டும் என்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற சிறுபான்மை அணியின் ஆலோசனை கூட்டத்தில் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார்.



கூட்டத்திற்கு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களின் நம்பிக்கையை பாஜக பெற்றுள்ளது. சிறுபான்மை சமூகத்திற்காக அறிவித்த நலத்திட்டங்களை அந்த மக்களுக்கு கொண்டு சேர்த்து, அதன் மூலம் உண்மையான சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக பாரதிய ஜனதா கட்சி திகழ்கிறது.

மக்களிடம் இந்த நம்பிக்கையை விதைத்து எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்ப வேண்டும் என்பதே நோக்கம்.

தமிழகத்தில் பாஜக வளர்ச்சி மிக வேகமாக சிறப்பாக உள்ளது என்பதை கட்சியில் உள்ள நாங்கள் சொல்வதை விட திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் அவர்களே சொல்கிறார் என்றால் அந்த அளவிற்கு இன்றைக்கு மக்களின் மனங்களில் தாமரை சின்னம் பதிந்திருக்கிறது.

எங்களுடைய மாநில தலைவர் அண்ணாமலையின் மிகச் சிறப்பான செயல்பாட்டின் மூலம் சிறுபான்மை மக்களிடத்தில் மிகப்பெரிய நற்பெயரை பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் காலம் காலமாக செய்யக்கூடிய வாக்கு வங்கி அரசியல் இனிமேல் தமிழகத்தில் ஈடுபடாது. பாஜக ஒரு போதும் இஸ்லாமியரக்ளை தனிமைப்படுத்தி பார்க்கவில்லை. மாநில தலைவர் கூட இஸ்லாமிய சகோதர்களே என்று தான் அழைக்கிறார்.

நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியான தவ்ஹீத் ஜமாத் போன்ற கட்சிகள் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளனர். எனவே, பாஜக சிறுபான்மை பிரிவு சார்பில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு பாதுகாப்பு கொடுப்போம்.

வேல்முருகன், திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் (ஆண்மை இருந்தால்) எங்களை தடுத்து பார்க்கட்டும் முற்றுகை இடும் உங்களை சிதரடிப்போம் ஜனநாயக ரீதியில் நாங்களும் அத்துமீறுவோம்.

தமிழகத்தில் காவல்துறையும், உளவுத் துறையும் பூஜ்ஜியம். கோவை காவல்துறை மத நல்லிணக்கத்திற்கு எதிராக உள்ளது. கோவையில் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சங்கமேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகத்துடன் பேசி பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் அங்கு செல்ல முற்பட்ட போது, காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். மதநல்லிணக்கம் வேண்டாம் என்று தடுக்கின்றனர்.

ஆனால், ஜாமாத்தார்கள் என்ற பெயரில் சிலரை அங்கு அனுமதிக்கின்றனர். மொத்தத்தில், பாஜக அங்கு செல்லக்கூடாது என்பதில் காவல்துறை உறுதியாக உள்ளனர்.

கர்நாடகாவில் குக்கர் குண்டு வெடிப்பு குறித்து பாஜக விமர்சனம் செய்யவில்லை என கூறுகின்றனர். அதே வேளையில், அங்கு நடைபெற்ற சம்பவத்தை அம்மாநில அரசும் காவல்துறையும் நடந்தது குண்டு வெடிப்பு என உறுதிபட கூறியது. ஆனால், கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை அமைச்சர் செந்தில் பாலாஜியும் தமிழக அரசும் சிலிண்டர் வெடிப்பு என்றே கூறுகிறது, என்று விமர்சித்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...