வருமான வரித்துறை வளர்ச்சியில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது - கோவையில் வருமான வரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன்

மேற்கு மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் வருமான வரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன், வரி ஏய்ப்பு தொடர்பான தகவலை திரட்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் வருமான வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் ஆன்லைன் மூலமே விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.


கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் ஆய்வு மேற்கொண்டு வரும் வருமான வரித்துறை ஆணையாளர் ரவிச்சந்திரன், இன்று மேற்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அகில இந்திய அளவில் வருமான வரித்துறை வளர்ச்சியில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. கூடுதலாக வசூல் செய்யப்பட்ட வரி திரும்ப வரவில்லை என்று புகார் இருந்தால் அந்த புகாரை சரி செய்ய கூடுதல் கவனம் செலுத்தி உள்ளோம்.

இந்த ஆண்டு வருமான வரி செலுத்த பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி உள்ளோம். ஆன்லைன் வழியாக வரி செலுத்தும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு பின்னர் வரி வசூல் 12 முதல் 13% குறைந்து இருந்தது. ஆனால், 2021-2022- ல் 40% வரி வசூல் அதிகரித்துள்ளது. 2022-2023 ஆண்டிலும் கிட்டத்தட்ட வரி வசூல் 40 சதவீதத்தை நெருங்கியுள்ளது.

வரி ஏய்ப்பு தொடர்பான தகவலை திரட்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் எப்படியும் சிக்கிக் கொள்வார்கள். வருமான வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் ஆன்லைன் மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆவணங்களும் ஆன்லைன் மூலமே சரிபார்க்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் விசாரணை நடக்கும் போது ஒரு குறிப்பிட்ட அதிகாரி தான் விசாரிப்பார் என்ற நிலை இருக்காது.

நாட்டிலுள்ள ஏதாவது ஒரு அதிகாரி தான் விசாரணை நடத்துவார். வருமான வரி சோதனை தொடர்பான தகவல்களை தர மறுப்பது பயனாளர்களின் ரகசியங்களை பாதுகாக்க தான். முறையாக வரி செலுத்துவோருக்கு சிறப்பு போர்டல் வசதி உள்ளது.

வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு சிறை தண்டனையும் பெற்றுக் கொடுத்து உள்ளோம், இவ்வாறு ரவிச்சந்திரன் கூறினார்.

Newsletter

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...