திருப்பூர் காங்கேயம் அருகே கார் மீது டேங்கர் லாரி மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியான சோகம்..!

உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக காரில் சென்றவர்கள் மீது டேங்கர் லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த மற்றொருவர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் தனது குடும்பத்தினருடன் காங்கேயத்தில் இருந்து சென்னிமலையில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளனர்.

அப்போது சென்னிமலையில் இருந்து காங்கேயம் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி, சிவியார்பாளையம் அருகே விஸ்வநாதன் ஒட்டி வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில், காரில் பயணித்த விஸ்வநாதன் மற்றும் அவரது மாமியார் மணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



இதில் படுகாயமடைந்த ரமணன் மற்றும் உமாபதி ஆகியோர் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ரமணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் பயணம் செய்த ரமணன் மற்றும் உமாபதி ஆகியோர் படுகாயங்களுடன் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் ரமணன் உயிரிழந்தார்.

மேலும், உமாபதி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கேயம் அருகே கார் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...