கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற அசாம் மாநில வாலிபரை கைது செய்த போலீசார், அவர் பையில் இருந்த 5 கிலோ 500 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு துறை போலீசார் மலுமிச்சம்பட்டியில் இருந்து செட்டிபாளையம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் இருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அந்த வாலிபரிடம் விசாரித்த போது, அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சோனு குமார் முகியா என்பதும், அவர் கஞ்சா விற்க முயன்றதும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5 கிலோ 500 கிராம் எடையுள்ள கஞ்சா, செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர், கைதான சோனு குமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.