கோவை விமான நிலையத்தில் மகளிர் குழு உற்பத்தி பொருட்கள் விற்பனையகத்தை திறந்து வைத்த அமைச்சர் பெரிய கருப்பன்

தமிழக ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கோவை விமான நிலையத்தில் உள்ள விற்பனையகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் விமானம் மூலம் கோவை வருகை தந்தார்.



இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் தமிழக ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஊரகவளர்ச்சித் துறை செயலர் அமுதா, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் கூறியதாவது,



ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களில் நடைபெற்று வரும் பணிகள், மக்கள் பிரதிநிதிகளின் தேவைகள், எதிர்பார்ப்புகள் கேட்டறிகின்ற வகையில் மாவட்டம் தோறும் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதனடிப்படையில் நேற்று ஈரோடு மாவட்டத்திலும், இன்று கோவை மாவட்டத்திலும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கோவை விமான நிலையத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையகத்தை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை மகளிர் குழுவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வீதிகளில், கிராமங்களில் விற்று வந்த நிலையில், அந்த உற்பத்தி பொருட்களை விமான நிலையத்தில் அரங்கு அமைத்து விற்பனை செய்யக்கூடிய வகையில், விற்பனை நிலையம் அமைப்பப்பட்டுள்ளது.



எல்லா வகையிலும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள் தரமானதாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. கோவை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யக்கூடிய பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் இது போன்ற விற்பனையகத்தை போல, இன்னும் பல அரங்குகளை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...