உலக மண் தினத்தை முன்னிட்டு டிச.5-ல் மண்‌ காப்போம்‌ இயக்கம்‌ சார்பில்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக மண்‌ தினத்தை முன்னிட்டு டிசம்பர்‌ 5-ம்‌ தேதி ஈஷா மையத்தின் மண்‌ காப்போம்‌ இயக்கம்‌ சார்பில் ‌தமிழகம்‌ முழுவதும்‌பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு.


சென்னை: உலக மண்‌ தினத்தை முன்னிட்டு மண்‌ காப்போம்‌ இயக்கம்‌ சார்பில்‌ மண்‌ வளப்‌ பாதுகாப்பின்‌ முக்கியத்துவம்‌ குறித்து பொதுமக்களிடம்‌ விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தில் 60க்கும்‌ மேற்பட்ட இடங்களில்‌ டிசம்பர்‌ 5-ம்‌ தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ நடைபெறவுள்ளது.

இது தொடர்பான சென்னை பிரஸ்‌ கிளப்பில்‌ காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ மாநில கள ஒருங்கிணைப்பாளர்‌ செய்தியாளர்களிடம் பேசியதாவது,



சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும்‌ வரும் 5-ம்‌ தேதி காலை 8 மணி முதல்‌ 9 மணி வரை பேருந்து நிலையம்‌, ரயில்‌ நிலையம்‌, கடற்கரை உள்ளிட்ட பொது மக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களில்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ நடத்தப்பட உள்ளது.

'மண்ணுக்காக நடப்போம்‌' 'மண்ணுக்காக நிற்போம்‌' 'மண்ணுக்காக சைக்கிள்‌ பேரணி' உள்ளிட்ட நிகழ்ச்சிகள்‌ தமிழ்நாடு முழுக்க மண்‌ காப்போம்‌ இயக்கத்தின்‌ தன்னார்வ தொண்டர்கள்‌ தமிழகத்தின்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ நடத்த திட்டமிட்டுள்ளனர்‌.

சென்னையில்‌ மடிப்பாக்கம்‌ ஏரிக்கரை, எலியட்ஸ்‌ கடற்கரை, மீனாட்சி கல்லூரி, கபாலீஸ்வரர்‌ கோயில்‌ உள்ளிட்ட இடங்களிலும்‌, மதுரை தேவர்‌ சிலை, வேலூர்‌ கோட்டை, ஓசூர்‌ ரயில்‌ நிலையம்‌, ராமேஸ்வரம்‌ ராமநாத சுவாமி கோயில்‌ போன்ற மக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களில்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ நடைபெறவுள்ளது.

அதே நாளில் இந்தியா முழுவதும்‌ உள்ள அனைத்து மாநிலங்களிலும்‌ பல்வேறு நிகழ்ச்சிகள்‌ நடைபெறவுள்ளது மண்‌ வள பாதுகாப்பு குறித்து சட்டங்கள்‌ மற்றும்‌ கொள்கைகளை உருவாக்க வேண்டும்‌ என்பதை வலியுறுத்தி ஈஷா நிறுவனர்‌ சத்குரு ஜக்கி வாசுதேவ், மண்‌ காப்போம்‌ என்ற சர்வதேச சுற்றுச்சூழல்‌ இயக்கத்தை தொடங்கி உள்ளார்‌.

தற்போது விவசாய மண்ணில்‌ கரிம சத்தின்‌ அளவு 0.5% என்ற அபாயகரமான அளவில்‌ உள்ளது. இதனை குறைந்தபட்ச அளவான 3 முதல்‌ 6% வரை அதிகரிக்க வேண்டும்‌. இல்லையெனில்‌ உணவுப்‌ பற்றாக்குறை, பருவநிலை மாற்றம்‌, வாழ்வாதார இழப்பு, மக்கள்‌ இடம்பெயர்தல்‌ உள்ளிட்ட பல பிரச்சினைகள்‌ உருவாகும்‌.

மார்ச்‌ 21-ம்‌ தேதி லண்டனில்‌ இருந்து தனது மோட்டார் சைக்கிள்‌ பயணத்தை தொடங்கிய சத்குரு இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ்‌, உள்ளிட்ட பல ஐரோப்ப நாடுகளுக்கு பயணித்துள்ளார்‌. அந்த நாடுகளில்‌ வேளாண்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ துறை அமைச்சர்கள்‌, அரசியல்‌ தலைவர்கள்‌, விஞ்ஞானிகள்‌, சினிமா பிரபலங்கள்‌, ஊடக துறையினர்‌ என பல்வேறு தரப்பினர்‌ சந்தித்து கலந்துரையாடினார்‌.

ஐரோப்பாவில்‌ இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற அவர்‌ இந்தியாவிற்கு வந்து தமிழ்நாட்டில்‌ தனது பயணத்தை நிறைவு செய்தார்‌. சர்வதேச அளவில்‌ பெரும்‌ தாக்கத்தை ஏற்படுத்தி வரும்‌ மண்‌ காப்போம்‌ இயக்கம்‌ 391 கோடிக்கும்‌ அதிகமான மக்களின்‌ ஆதரவைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...