திருப்பூர் பல்லடத்தில் அடுத்தடுத்து இரண்டு போலி மருத்துவர்கள் கைது - பொதுமக்கள் அதிர்ச்சி..!

பல்லடம் அருகே சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் போலி மருத்துவர்கள் இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் அதிகாரிகள் திருப்பூர் மாவட்டத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்லடம் அடுத்த மாணிக்கபுரம் சாலையில் உள்ள கிளினிக்கில் சோதனை செய்தனர்.

அப்போது இந்த கிளினிக்கை நடத்தி வந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அபிமன்யு பிஸ்வாஷ் மகன் கிருஷ்ணா ஆனந்த் பிஷ்வாஷ் பிளஸ் டூ படித்துவிட்டு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்ததை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தப்பட்டது.



இதனையடுத்து போலி மருத்துவர் கிருஷ்ணா ஆனந்த் பிஸ்வாசை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் பல்லடம் அடுத்த லட்சுமி மில் பகுதியிலும் பெண் ஒருவர் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.



லட்சுமி மில் பகுதியை சேர்ந்த சின்ராஜ் மனைவி கோகிலா என்பவர் மருந்தகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இத்துடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கே ஊசிகள் கிடந்ததை ஆதாரமாக கொண்டு நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார் என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிஎஸ்சி நர்சிங் படிப்பை பாதியில் கைவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்துள்ளது.



தொடர்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் அளித்த புகார் அடிப்படையில், பல்லடம் போலீசார் கோகிலாவை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பல்லடத்தில் அடுத்தடுத்து இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...