அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோவை மாவட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கிறது - கோவையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கோவையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து பேசிய அவர், 18 மாத கால திமுக ஆட்சியில் கோவை மாவட்ட மக்களுக்கு என்ன திட்டம் கொண்டுவரப்பட்டது? என்றும் தமிழக மக்கள் என்ன பயன் பெற்றார்கள்? எனவும் கேள்வி எழுப்பினார்.



கோவை: சொத்துவரி, மின்கட்டணம், பால் மற்றும் கட்டுமான பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்வை கண்டித்து, தமிழக அரசுக்கு எதிராக கோவை சிவானந்தா காலனி பகுதியில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.



முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.



இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சிறப்புரையாற்றிய எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, சொத்துவரி, பால் விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை உணர்ந்தாவது செயல்பட வேண்டும்.

இந்த 18 மாத கால ஆட்சியில் கோவை மாவட்ட மக்களுக்கு என்ன திட்டம் கொண்டுவரப்பட்டது தமிழக மக்கள் என்ன பயன் பெற்றார்கள்?. திமுக அரசு கும்பகர்ணன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. கார்ப்பரேட் கம்பெனி தமிழகத்தை ஆண்டு வருகிறது. 10 ஆண்டு அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி. ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. எனவே, அதிமுகவை பேச தமிழக முதல்வருக்கு தகுதி கிடையாது.

அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம், தடுப்பணைகள், பில்லூர் 3வது குடிநீர் திட்டம், அத்திகடவு - அவிநாசி திட்டம் போன்ற திட்டங்கள், மேம்பாலங்கள், புதிய அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு கலை கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது.



அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திறந்து வைத்தவர்கள் தான் திமுக கட்சியினர். கோவையில் மேம்பாலங்கள், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் போன்ற பல்வேறு திட்டங்களை திமுக அரசு ஆட்சி அமைத்த பின் கிடப்பில் போட்டு விட்டார்கள். தேர்தலின் போது திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களையும் நிறுத்திவிட்டனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மக்களுக்கு போய் சேர வேண்டிய திட்டங்களை நிறுத்தி வைத்தால் கோவை மக்கள் கொந்தளித்து விடுவார்கள்.

தொடர்ந்து அதிமுகவை குறித்து விமர்சிக்கும் ஸ்டாலினுக்கு அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா, அப்படி கண்ணுக்கு தெரியவில்லை என்றால் கோவைக்கு வரும் போது அவர் கண்ணாடி போட்டு கொண்டு வர வேண்டும்.

திமுக ஆட்சியில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோவை மாநகர சாலைகள் சீரமைப்பு பணிகள் கைவிடப்பட்டதால் சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாய் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் கடும் இடையூறாக இருந்து வருகிறது.

சொத்து வரி, மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா முடிந்த பின்பு இப்பொழுது தான் தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் திடீரென மின் கட்டணத்தை உயர்த்துவது ஏற்புடையதல்ல எனவே அதை ரத்து செய்து பின்னர் படிப்படியாக உயர்த்திக் கொள்ளலாம்.

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு தர வேண்டும், பாதிக்கப்பட்ட செங்கல் உற்பத்தியை சீர் செய்ய வேண்டும், தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு வழங்குவதை கைவிட வேண்டும், ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் ரத்து விவகாரத்தில் நாங்கள் செய்ததைத்தான் திமுக அரசும் செய்துள்ளது. 7.5% உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தது அதிமுக தான். உள்ளாட்சியிலும், மருத்துவம் சுகாதாரத்துறை, போக்குவரத்து, கூட்டுறவு ஆகிய பல்வேறு துறைகளில் மத்திய அரசிடம் இருந்து அதிமுக அரசு விருதுகளை பெற்றது. பல ஆண்டுகால காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டதும் அதிமுக தான்.



திமுக ஆட்சி வரும்போது எல்லாம் சட்ட ஒழுங்கு கெட்டுவிடும். அதிமுகவினர் போராட்டத்திற்கு வர வந்த வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும். தேவை இல்லாமல், அதிமுக நிர்வாகிகளுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம். இல்லையெனில், அதன் விளைவு விபரீதமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கின்றேன்.

ஸ்டாலின் நடைபயணம் செல்லும் போது அவரது மகன் நடித்த கலக தலைவன் படம் எப்படி உள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் கேட்பது மிகவும் முக்கியமான ஒன்றா..?. திமுக கட்சியில் திமுகவிற்காக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. தற்பொழுது அதிமுகவிலிருந்து சென்று திமுகவில் அமைச்சர்களாக எம்.எல்.ஏக்களாக உள்ளவர்கள் திமுக பேச்சைக் கேட்டு தவறான செயல்களை செய்ய வேண்டாம்.

வரும் 9ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் 13ம் தேதி நகராட்சி மாநகராட்சிகளிலும் 12ம் தேதி ஊராட்சி ஒன்றியங்களிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அதிமுக ஆட்சியில் திமுக ஆளுநரை சந்தித்து அதிமுக மீது புகார் மனு அளித்தது போல் தற்பொழுது திமுக ஆட்சியில் நாங்கள் ஆளுநரை சந்தித்து மனு கொடுப்பதில் என்ன தவறு உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் அதிமுக வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.



இதில் தலைமை உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது, திமுக அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டப் பணிகளை முடக்கி கோவையை வஞ்சிகிறது. மீண்டும் எடப்பாடியார் முதல்வராக வந்தால் தான் விடிவு காலம் கிடைக்கும். ஒன்றரை ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காதவர் தான் முதல்வர் ஸ்டாலின். இவ்வாறு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.



இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். 



முன்னதாக இந்த போராட்டத்தின் துவக்க நிகழ்வில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அவர் நடத்த இருக்கும் மாநாட்டின் அழைப்பிதழை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கினார். 

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...