கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, பால் விலை மற்றும் சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோவை: மின்சார வரி உயர்வு, பால் விலை மற்றும் சொத்துவரி உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாடங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விலைவாசி உயர்வைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், வரிகளை குறைக்க வேண்டும் என்றும், விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தினமும் 300 ரூபாய்க்கு கீழ் ஊதியம் பெற்று சாமானிய மக்கள் குடும்பம் நடத்தி வரும் சூழலில், சொத்துவரி, பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் கோவை மாவட்ட கன்வீனர் சாந்தி சந்திரன் கூறியுள்ளார்.
எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளம் கொண்டு வரிகளைக் குறைத்து, விலையேற்றத்தைத் திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.