கோவை வீரகேரளம் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய இளம் பெண் ஒருவர் வாய்க்காலில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை வடவள்ளி அடுத்த வீரகேரளம் ராஜ் நாயுடு லேஅவுட்டை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது இளைய மகள் நிஷாந்திக்குவலிப்பு நோய் இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்காக கடந்த சில மாதங்களாக மருந்துகளை அவர் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென நிஷாந்தி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அச்சமடைந்த அவரது பெற்றோர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து நிஷாந்தியை தேடி வந்தனர். இந்நிலையில் வீரகேரளம் கிளை வாய்க்காலில் இளம் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, சடலமாக மீட்கப்பட்டவர் நிஷாந்தி என்பது தெரியவந்தது.
இதை அடுத்து அவரது உடலைபிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் நிஷாந்தி வலிப்பு ஏற்பட்டு தவறி வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.