கோவை அருகே அலட்சியம் காட்டிய நெடுஞ்சாலைத்துறையினர்-களத்தில் இறங்கி சாலையை சீரமைத்த பொதுமக்கள்

கோவை அருகே மேட்டுப்பாளையம் சாலையை சீரமைக்கக்கோரி நெடுஞ்சாலை துறையினரிடம் பலமுறை மனு அளித்து ஓய்ந்துபோன பொதுமக்கள், தாங்களாகவே ஒன்று சேர்ந்து சீரமைத்தனர்.


கோவை: துடியலூர் காவல்நிலையம் முதல் காலனி கேட் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பல ஆண்டுகளாக மழைநீர் வடிகால் சரிவர அமைக்கப்படாததாலும், கட்டிட கழிவுகளை கொட்டியுள்ளதாலும், சாலை ஒட்டிய பகுதி மண்மேடுகளாக காட்சியளிக்கிறது.

மழை காலங்களில்மழைநீர் செல்ல கூட வழியின்றி சாலை முழுவதும்குளம் போல் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டு வருவதாகவும் இதனால் சாலைகள்குண்டும் குழியுமாகிஅடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.



உயிர்பலி வாங்க காத்திருக்கும் இந்த சாலையை சீரமைக்கவும்,மழைநீர் வழிதடங்களை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டி பல முறைநெடுஞ்சாலை துறையினரிடம்கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால் வடமதுரையில் இருந்து காலனி கேட் வரை நடுரோட்டில் பல இடங்களில் குழி ஏற்பட்டு வாகஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த குழிகளை மூடி தார்சாலையை பராமரிக்குமாறு நெடுஞ்சாலை துறையினரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறும் பொதுமக்கள், சில தினங்களுக்கு முன்பு நடுரோட்டில் உள்ள குழியில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் நிலை தடுமாறி கிழே விழுந்து தலையில் அடிபட்டதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.



இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி வியாபரிகள், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து நடுரோட்டில் ஏற்பட்ட குழிகளை தற்காலிகமாக கான்கிரேட் கலவை கொட்டி சமப்படுத்தினர். அந்த நேரத்தில் துடியலூர் காவல்துறையினர் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலை துறை முழு அளவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றன.



நெடுஞ்சாலை துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை தெருவித்திருந்த நிலையில் சாலை செப்பனிப்படிப்படாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் இருந்திருக்கின்றனர்.

இந்நிலையில் இனி அதிகாரிகளை நம்பினால் எந்த பயனும் இல்லை என்று பொதுமக்களே சாலையை செப்பனிட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருக்கின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...