கோவையில் மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு சார்பில் மூத்த ஜவுளித்தொழில் நிர்வாகிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கோவை: அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இந்திய ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார், இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் சுளசிதரன், சுலோச்சனா காட்டன் நூற்பாலை நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார், கண்ணபிரான் நூற்பாலை நிர்வாக இயக்குனர் ஸ்ரீஹரி, பழநிஆண்டவர் குழுமத்தின் தலைவர் கிட்டுசாமி, கேஜி குழுமத்தின் தலைவர் கேஜி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த ஜவுளித்தொழில் தலைவர்கள் பலருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் பேசியதாவது: இந்திய ஜவுளித்தொழில் வளர்ச்சியில் கோவை, திருப்பூர் உள்ளிட்டமாவட்டங்கள்முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார்.
ஜவுளித்தொழில் அமைப்புகளில் தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளில் வகித்த மற்றும் வகித்து வரும் மூத்த தொழில்துறையினர் உலகளவில் இந்திய ஜவுளித்தொழில் சிறந்து விளங்க முக்கிய காரணமாக திகழ்வதாக தெரிவித்தார்.
அத்தகைய சிறப்புமிக்க மூத்த நிர்வாகிகளை கவுரவிக்கும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளதாகவும் ஜெயபால் கூறினார்.