கோவை மத்திய சிறை வார்டன் பூபாலன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் சாதிக் என்பவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கோவை: கோவை மத்திய சிறைச்சாலையில் கடந்த 1996-ம் ஆண்டு கைதிகள் சில பேருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், சிறையில் இருந்த மற்ற சில குறிப்பிட்ட மதத்தின் கைதிகளை சில வார்டன்கள் மோசமாக நடத்தியதாகவும் கூறி அவர்கள் மீது முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பாஸ், அபுதாகிர், சம்சுதீன் மற்றும் சாதிக் ஆகியோர் கடந்த 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய சிறை டிஐஜி அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியிலிருந்த வார்டன் பூபாலன் எனப்வர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி வெடிக்க செய்தும்,பயங்கர ஆயுதங்களால் கொடூரமாகவும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் இவ்வழக்கானது கோவை சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. குற்றவாளிகள் அனைவரது மீது 1998-ஆம் ஆண்டு கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் வழக்கில் தொடர்புடைய 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த சாதிக் இதுவரை பிடிபடவில்லை.
இந்நிலையில் தேடப்படும் குற்றவாளியாக சாதிக்கை அறிவித்த குற்றவியல் நீதிமன்றம், வரும் டிசம்பர் 23-ம் தேதிக்குள் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ராஜாவின் வீடு மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.