கோவை எட்டிமடை அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய கூலித் தொழிலாளியை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: எட்டிமடை கம்பர் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வெள்ளியங்கிரி வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்த போது சமையல் செய்ய வைத்திருந்த விறகு அடுப்பில் வைத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த 1 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் வெள்ளியங்கிரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் எட்டிமடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.