கோவையில் குடிநீர் விநியோகம், தூய்மை பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப்‌ பணிகள்‌, தார்சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌ 42-க்குட்பட்ட வேலாண்டிபாளையம்‌, தவசி நகா்‌ பகுதிகளில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளா்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு செய்தார்.



மேலும் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்காத குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளார்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.



இதனைதொடர்ந்து அதே பகுதிகளில்‌ டெங்கு கொசு ஓழிப்பு பணியாளார்கள்‌ வீடு வீடாகச்‌ சென்று அபேட்‌ மருந்தை தொட்டிகளில்‌ ஊற்றுவது, தேவையில்லாத பொருட்களை அகற்றுவது, பொது மக்கள்‌ தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில்‌ கொசுப்‌ புழுக்கள்‌ உள்ளனவா என்பதை கண்டறிவது போன்ற பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு செய்தார்‌.

அதனைத்‌ தொடாந்து, வேலாண்டிபாளையம்‌, கோவில்மேடு உயாநிலைப்பள்ளி வளாகத்தில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ 22.50 லட்சம்‌ ரூபாய் மதிப்பீட்டில்‌ கழிப்பிடம்‌ கட்டூம்‌ பணியை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ முடித்து விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவில்மேடு சாஸ்திரி நகரில்‌ ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், அப்பகுதிகளை நிலஅளவை செய்து, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌. பின்னர் தவசி நகா்‌ பகுதியில்‌ உள்ள செம்மொழி பூங்காவினை ஆய்வு செய்த ஆணையாளர் பூங்காவினை தூய்மையாக பராமரித்திட அறிவுறுத்தினார்.

மேலும் தவசி நகர்‌ பகுதியில்‌ உள்ள மழைநீர் வடிகால்களை ஆய்வு செய்து, அவற்றை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்‌ உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல தலைவா்‌ தெய்வபானை தமிழ்மறை, உதவி ஆணையாளர்‌ சேகா்‌, மாமன்ற உறுப்பினர் பிரவீன்ராஜ், உதவி செயற்பொறியாளர்‌, மண்டல சுகாதார அலுவலர், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...