சுற்றுலா பயணிகளால் களை கட்டிய உதகை - சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் தாவரவியல் பூங்காவில் குவிந்த பயணிகள்

உதகையில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வந்த நிலையில், சுற்றுலா பயணிகள் மழையையும் பொருட்படுத்தாமல் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் தற்போது 2-வது சீசன் முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், அரசு தாவரவியல் பூங்காவை காண அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.



இதனிடையே இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வரும் சூழலில், உதகைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தவாறே சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர்.



குறிப்பாக மழையையும் பொருட்படுத்தாமல் தாவரவியல் பூங்காவில் உள்ள பெரணி இல்லம், கண்ணாடி மாளிகை, புல் மைதானம், கல்மரம், இத்தாலியன் பூங்கா, ஜேஜே நினைவுத்தூண் உள்ளிட்டவற்றை கண்டு மகிழ்ந்தனர்.

மழையில் குடையை பிடித்தவாறு குடும்பத்தோடு பூங்காவை கண்டு ரசித்ததோடு மலர் மாடம், மரங்களுக்கு கீழ் அமர்ந்து கால நிலையை அனுபவித்தனர். இதனால் 2-வது சீசன் முடியும் தருவாயில் தற்போது களைகட்டியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...