வடவள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் நகைகள் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை வடவள்ளி அருகே தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 12 சவரன் நகைகளை கொள்ளையடித்து மர்ம நபர்கள் கைவரிசை.



கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்த குருசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (57). இவர் தனியார் நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சீனிவாசன் கடந்த 24 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் காலை வழக்கம் போல அவரது வீட்டில் பணியாற்றும் மணியம்மாள் என்ற பெண் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பிரோ உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மணியம்மாள் உடனடியாக சீனிவாசனுக்கு தகவல் அளித்துள்ளார்.

இதன் காரணமாக உடனடியாக கோவைக்கு வந்த சீனிவாசன் வீட்டில் பார்த்த போது பிரோவில் இருந்த சுமார் 12 சவரன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தடயவியல் துறை அதிகாரிகள் உதவியுடன் தடயங்களை சேகரித்தது மட்டுமல்லாமல், அங்கிருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...