உக்கடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ரத்த தான முகாமில், சுமார் 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, ரத்த தானம் செய்தனர்.
கோவை:கோவை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதனை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோவை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் இந்த ரத்ததான முகாம் நடைபெற்றது. கோவை மாநகர மாவட்ட தலைவர் அஜ்மல் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
இந்த ரத்த தான நிகழ்வில் மாவட்ட செயலாளர் சைஃபுதீன், மாவட்ட பொருளாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளமுடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.