பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற மினி மாரத்தானில் 50க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கோவை: தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் மினி மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த மினி மாரத்தான் போட்டியில் 50க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு துவங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் ரேஸ்கோர்ஸ் வழியாக சென்று வ.உ.சி மைதானத்தில் நிறைவு பெற்றது.