நீலகிரி முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஊன் உண்ணிகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி உள்ளிட்ட ஊன் உண்ணிகள் கணக்கெடுக்கும் பணிகள் இன்று முதல் துவங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் 191 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆண்டுதோறும் புலி உள்ளிட்ட ஊன் உண்ணிகளின் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படுவது வழக்கம். இதற்காக வனப்பகுதிக்குள் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஊன் உண்ணிகளின் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 191 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா இரண்டு கேமராக்கள் வீதம் மொத்தம் 382 கேமராக்களை பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



இன்று துவங்கியுள்ள இந்த கணக்கெடுப்பு பணிகள் அடுத்த 40 நாட்களுக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதுமலை புலிகள் காப்பக உள் மண்டல வனப்பகுதிக்கு உட்பட்ட முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, நெலாக்கோட்டை, மசினகுடி ஆகிய வனச்சரகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...