செட்டிபாளையம் அருகே கோர விபத்து: டிப்பர் லாரி மோதி மென்பொறியாளர் உயிரிழப்பு…!

செட்டிபாளையம் ரயில்வே மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த டெப்ரிங் ஸ்ட்ராங் (24) மீது கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை செட்டிபாளையம் அருகே டிப்பர் லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற மென் பொறியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை சுந்தராபுரம் கஸ்தூரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் (51), (ஆங்கிலோ இந்தின் ) பொறியாளர். இவரது மகன் டெப்ரிங் ஸ்ட்ராங் (24) தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இன்று வார விடுமுறை என்பதால்டெப்ரிங் ஸ்ட்ராங்தனது நண்பர்களுடன் சுந்தராபுரத்திலிருந்து மலுமிச்சம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பின்னர் மலுமிச்சம்பட்டியில் இருந்து மீண்டும் செட்டிபாளையம் செல்லசெட்டிபாளையம் ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட டெப்ரிங் ஸ்ட்ராங்சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த செட்டிபாளையம் போலீசார் டெப்ரிங் ஸ்ட்ராங்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து திருச்சியை சேர்ந்த லாரி ஓட்டுநர் நவீன்குமார் (27) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...