கோவை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் பரிதாப பலி

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் இருசக்கர வாகனம் மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம். இவர்கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கோவை நோக்கிஅதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாக்கியம் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டுபடுகாயமடைந்தார். அருகில் இருந்தர்வர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்தவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் உற்கார்ந்து வந்த இளைஞரும் படுகாயமடைந்தார்.

இந்த விபத்து தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த கிரிதர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...