கோவையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 800-க்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை நல வாரிய தலைவர் பொன்குமார் வழங்கினார்.


கோவை: ராமநாதபுரம் பகுதியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் தாமதமின்றி வழங்குவது குறித்தும், நல வாரியங்களை மேம்படுத்துவது குறித்தும் தொழிற்சங்கங்களுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டது.



மேலும் கோவை மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 764 தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக 17 லட்சத்து 89 ஆயிரத்து 200 ரூபாய் மற்றும் இயற்கையாக மரணமடைந்த 11 தொழிலாளர்களின் நியமனதாரர்களுக்கு 3 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.

மேலும் விபத்தில் மரணமடைந்த ஒரு தொழிலாளியின் வாரிசுதாரருக்கு 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மற்றும் புதிதாக ஒப்பளிப்பு செய்யப்பட்ட 103 ஓய்வூதியதாரர்களுக்கு 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 879 பயனாளிகளுக்கு 23 லட்சத்து 89 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி, தொழிலாளர் உதவி ஆணையர் காயத்திரி மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...